‘கச்சா பாதாம்...’ பாட்டுக்கு சூப்பரா நடனமாடிய போலீஸ்காரர்கள் - வைரல் வீடியோ

viral-video நடனம் பாட்டு kacha-badam album-songs police-dance கச்சாபாதாம் போலீஸ்காரர்கள் வைரல்வீடியோ
By Nandhini Mar 27, 2022 09:20 AM GMT
Report

தற்போது சமூகவலைத்தளத்தில் உலகளவில் வைரலாகி வரும் பாடல் தான் ‘கச்சா பாதாம்’ பாடல். இப்பாடல் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ளது.

இன்ஸ்டா, பேஸ்புக், டுவிட்டர் என பல பேர் இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடி வருகிறார்கள். இந்தப் பாடலை கேட்கும்போது நமக்கே டான்ஸ் ஆடணும் போலத்தான் இருக்கு.

ஒரு வேர்க்கடலை வியாபாரி இப்பாடலை பாடி விற்றுக் கொண்டு வரும்போது, இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.

இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியதும், ஆளாளுக்கு டான்ஸ் ஆடி வெளியிட ஆரம்பித்து விட்டனர். ஒரு மாதத்திற்கு முன்பு அவர் ஒரு சாதாரண வேர்க்கடலை வியாபாரி. இப்போது அவர் உலக புகழ் பெற்றுவிட்டார்.

இன்ஸ்டாங்க்ராமில் 100 மில்லியன் பேருக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது இந்த ‘கச்சா பாதாம்’ பாடல்.

அந்த வகையில், தற்போது காவலர்களையும் விட்டுவைக்கவில். ‘கச்சா பாதாம்’ பாட்டுக்கு காவலர்கள் நடனமாடிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ -