100 மில்லியனை கடந்து உலகளவில் ட்ரெண்டாகும் ‘கச்சா பாதாம்...’ - இப்பாடல் உருவான சுவாரஸ்ய சம்பவம்
தற்போது சமூகவலைத்தளத்தில் உலகளவில் வைரலாகி வரும் பாடல் தான் ‘கச்சா பாதாம்’ பாடல். இப்பாடல் பட்டித்தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தள்ளது.
இன்ஸ்டா, பேஸ்புக், டுவிட்டர் என பல பேர் இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடி வருகிறார்கள்.
இந்தப் பாடலை கேட்கும்போது நமக்கே டான்ஸ் ஆடணும் போலத்தான் இருக்கு. இந்த அளவிற்கு ஹிட்டடித்துள்ள இப்பாடலுக்கு சூப்பரான பின்னணி ஒன்று உள்ளது.
அது என்னன்னா.. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வேர்கடலை வியாபாரி பூபன் பத்தியாகர் என்பவர் தள்ளுவண்டியில் வேர்க்கடலையை விற்று வந்துள்ளார். இவர் தன்னுடைய வேர்க்கடலை விற்க, வாடிக்கையாளர்களை கவர இவர் யோசித்துள்ளார்.
இதற்காக, அவரே ஒரு பாட்டை எழுதி, வித்தியாசமாக பாடி வேர்க்கடலையை விற்றுள்ளார். வாடிக்கையாளர்கள் இவருடைய வேர்க்கடலையை வாங்குகிறார்களோ இல்லையோ, இவரை பாடலை கேட்க மட்டும் ஓடி வந்துள்ளனர்.
இப்படியே இவர் பாட்டுப் பாடி விற்றுக் கொண்டு வரும்போது, இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியதும், ஆளாளுக்கு டான்ஸ் ஆடி வெளியிட ஆரம்பித்து விட்டனர்.
சமூக வலைதளங்களில் வைரலான இப்பாடலை கேட்ட ராப் இசை கலைஞர்கள் ரான் இ மற்றும் பிரக்யா தத்தா இருவரும் அந்த வியாபாரியின் பாடல் வரியையே அடிப்படையாக கொண்டு, பாடலின் உண்மையான பாடகரான பூபன் பத்தியாகரை வைத்தே ‘கச்சா பாதம்’ என்ற ஆல்பம் சாங்கை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆல்பம் பாடலை இணையத்தில் வெளியிட அது மாபெரும் வைரலாகி விட்டது. அந்த பாடலைப் போலவே அந்த பாடகர் பூபன் பத்தியாகரும் உலகம் முழுக்க தற்போது ரசிகர்கள் குவிந்து விட்டனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு அவர் ஒரு சாதாரண வேர்க்கடலை வியாபாரி. இப்போது அவர் உலக புகழ் பெற்றுவிட்டார்.
இன்ஸ்டாங்க்ராமில் 100 மில்லியன் பேருக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கடந்துள்ளது இந்த ‘கச்சா பாதாம்’ பாடல்.
சமூக வலைதளங்களில் இந்த கச்சா பாதம் என்ற பாடல் வைரலாகி வரும் நிலையில், இந்த பாடலுக்கு பிரபலங்கள், டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடி வருகின்றனர்.