கை விட்ட அமெரிக்கா..ஆதிக்கம் செலுத்தும் தலிபான்கள் .. கேள்விக்குறியாகும் காபூல் ?
ஆப்கானிஸ்தானில் மேலும் 3 மாகாணங்களின் தலைநகரங்களை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் ஆப்கான் அரசு படைகளுக்கும், தலிபான்களுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆப்கானில் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளை தலிபான்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மேலும் 3 மாகாணங்களை தாலிபான்கள் தன் வசமாக்கியுள்ளனர்.
ஆப்கானில் வடக்கிழக்கில் இருக்கும் பதாக்சன், பாக்லான் மாகாணங்களில் தலைநகரங்களை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். மேலும், மேற்கு பகுதியில் பாரா மாகாணமும் தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
?Fighting in Afghanistan's long-running conflict has escalated dramatically since May, when the US-led military coalition began the final stage of a withdrawal set to be completed before the end of the monthhttps://t.co/NFq7imx9Cq pic.twitter.com/qOHsVSzC8U
— Telegraph World News (@TelegraphWorld) August 11, 2021
இந்த நிலையில், அதிபர் அஷ்ரப் கனி, தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள பால்க் மாகாணத்துக்கு விரைந்துள்ளார். தற்போது வரைதலைநகர் காபூலுக்கு முன்கூட்டியே இதுவரை நேரடியாக அச்சுறுத்தல் வரவில்லை.
ஆனால் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் இன்னும் எவ்வளவு நாட்கள் காபூல் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதை ஊகிக்க முடியவில்லை என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இந்த பதற்றமான சூழலில், பாதுகாப்பு கருதி ஆப்கானில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற, இந்திய துாதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
The official, speaking on condition of anonymity, said that the new assessment of how long Kabul could stand was a result of the rapid gains the Taliban had been making around the country as U.S.-led foreign forces leave 2/6 pic.twitter.com/obQU4IqrGK
— Reuters (@Reuters) August 11, 2021
இந்த நிலையில் அமெரிக்க படைகள் வாபஸ் ஆகும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. என்றும் வருகிற செப்டம்பர் 11-ந்தேதிக்கு முன்பு அனைத்து படைகளும் முழுமையாக திரும்ப பெறப்படும் என அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த 20 ஆண்டுகளில் பல இழப்புகளை சந்தித்து விட்டோம். இனியும் இத்தகைய இழப்புகளை சந்திக்க விரும்பவில்லை. ஆப்கானை மீட்கவும், பாதுகாக்கவும் அந்த நாட்டு தலைவர்கள் ஒன்று சேர வேண்டும். இணைந்து போராட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க ராணுவத்தின் புதிய மதிப்பீட்டின்படி, 90 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் தாலிபன்களிடம் வீழும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.