கபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
கர்நாடக மாநிலத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணைக்கு தற்போது விநாடிக்கு 15,565 கனஅடி நீர் வரத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திறக்கப்பட்ட நீர் தமிழ்நாடு எல்லையை திங்கள்கிழமை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்
இதற்கிடையில், தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கனஅடி வீதம் காவிரி நீரை திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கர்நாடகாவில் முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தலைமையில் நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
மேலும், காவிரி நீர் விவகாரத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள கடையடைப்பு போராட்டத்தை கைவிடுமாறு முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாநிலத்தின் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், நீரை தொடர்ந்து தேக்கி வைப்பது சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் விரைவில் கைதாகப்போகும் கோட்டாபய! நீதிமன்றத்தில் அம்பலமான தகவல் IBC Tamil
ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு : முதன்முதலில் பென்டகன் வெளியிட்ட அறிவிப்பு IBC Tamil
உடைத்தெறியப்பட்டுள்ள உலக சாம்பியன் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள்! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு IBC Tamil