கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை - புகைப்படத்தை வைத்து மிரட்டிய பயிற்சியாளர்

Delhi Sexual harassment Crime
By Sumathi 1 மாதம் முன்
Report

கபடி வீராங்கனை, பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

 பாலியல் வன்கொடுமை

புதுடெல்லியைச் சேர்ந்த 27 வயதான கபடி வீராங்கனை போலீஸில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கபடி வீராங்கனையான நான் ஜோஹிந்தர் என்பவரிடம் 2012 ஆம் ஆண்டில் பயிற்சி பெற்றேன். அவர் தன்னை 2015 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்து அதனை

கபடி வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை - புகைப்படத்தை வைத்து மிரட்டிய பயிற்சியாளர் | Kabbadi Player Accuses Coach Of Rape Delhi

புகைப்படமாக எடுத்து வைத்துக்கொண்டு அதனை என்னிடம் காட்டி, இந்த புகைப்படங்களை வெளியிடுவதாகக் கூறி 2018 ஆம் ஆண்டு தனக்கு கிடைத்த பரிசுத் தொகையில் 40 லட்ச ரூபாய்க்கும் மேல் பெற்றுக்கொண்டதாக" தெரிவித்துள்ளார்.

மிரட்டல்

இதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் பயிற்சியாளர் ஜோஹிந்தர் தலைமறைவாகி விட்டார். இவரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.