தூக்கில் தொங்கிய கபாலி பட தயாரிப்பாளர் - என்ன காரணம்?
கபாலி பட தயாரிப்பாளர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்.
கபாலி
2016 ஆம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் கபாலி. இதை தமிழில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார்.
தெலுங்கில் இந்த படத்தை கே.பி.சௌத்ரி தயாரித்து, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் விநியோகம் செய்தார்.
தயாரிப்பாளர் தற்கொலை
இந்நிலையில் அவர் கோவாவின் சீயோலின் பகுதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்துள்ளார். நீண்ட நேரமாக அவர் தங்கி இருந்த வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அருகில் இருந்தவர்கள் வீடு கதவின் தாழ்பாலை உடைத்து உள்ளே சென்றனர்.
வீட்டின் உள்ளே கே.பி.சௌத்ரி இறந்த நிலையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
கடந்த 2013 ஆம் ஆண்டு போதைப் பொருள் வழக்கு தொடர்பாக சைபராபாத் போலீசார் கே.பி.சௌத்ரியை கைது செய்தனர். அதன் பின்னர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். கடன் பிரச்சனை அல்லது போதைப்பொருள் வழக்கு காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.