கபடி.. கபடி.. கபடி.. - பாகிஸ்தான் வீரரை கலாய்த்த இந்திய வீரர் ஷிகர் தவான்!

Shikhar Dhawan Cricket Indian Cricket Team Sports
By Jiyath Jan 21, 2024 04:56 AM GMT
Report

பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வானை கலாய்த்து பதிவிட்டுள்ளார் இந்திய வீரர் ஷிகர் தவான்.

சுவாரஸ்ய நிகழ்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

கபடி.. கபடி.. கபடி.. - பாகிஸ்தான் வீரரை கலாய்த்த இந்திய வீரர் ஷிகர் தவான்! | Kabaddi Shikhar Dhawan Troll Pakistan Player

இதில் 3வது டி20 போட்டியின்போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது. பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் பந்தை அடித்து விட்டு பேட்டை தவறவிட்டு வெறுங்கையுடன் ஓடி கிரீஸை தொட்டு 2 ரன்கள் எடுத்தார்.

கலாய்த்த தவான் 

ஆனால் அவர் சரியாக கிரீஸ் கோட்டை தொடவில்லை என தெரியவந்ததும், ஷார்ட் ரன் முறையில் ஒரு ரன் குறைக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

கபடி.. கபடி.. கபடி.. - பாகிஸ்தான் வீரரை கலாய்த்த இந்திய வீரர் ஷிகர் தவான்! | Kabaddi Shikhar Dhawan Troll Pakistan Player

இந்நிலையில் இந்த புகைப்படத்தை இந்திய வீரர் ஷிகர் தவான், தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அதில் 'கபடி கபடி கபடி' என்ற தலைப்புடன் ரிஸ்வானை கலாய்த்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.