கபடி வீரர் உயிரிழப்பு : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி

M K Stalin DMK
By Irumporai Jul 27, 2022 11:32 AM GMT
Report

கடலூரில் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல் அமைச்சர் நிதியுதவி அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கபடி விளையாட்டு போட்டியில் பங்கேற்று உயிரிழந்த வீரர் சஞ்சய் (எ) விமல்ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் :

முதலமைச்சர் வருத்தம்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், வல்லம் மதுரா மானடிகுப்பம் கிராமம், தெற்கு தெருவில் உள்ள புளியந்தோப்பு மைதானத்தில் 24-7-2022 அன்று மாவட்ட அளவில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது.

கபடி வீரர் உயிரிழப்பு : முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி | Kabaddi Players Death Chief Minister M K Stalin

இந்த கபடிப் போட்டியில் பங்கேற்ற புறங்கனி கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் (வயது 21) என்ற இளைஞர் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

ரூ 3 லட்சம் நிதியுதவி

உயிரிழந்தவரின் பெற்றோருக்கும் அவரது சகோதரிக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்த சஞ்சய் (எ) விமல்ராஜ் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 3 லட்சம் முதல் அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.