பிரபல இயக்குனர் மாரடைப்பால் மரணம்!
இயக்குனர் நாகேந்திரன், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இயக்குனர் நாகேந்திரன்
2015 ஆம் ஆண்டு, உண்மை கதையை மையமாக வைத்து, ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான 'காவல்' திரைப்படத்தின் இயக்குனராக அறிமுகமானவர் நாகேந்திரன்.
இந்த படத்தை புன்னகை பூ கீதா மற்றும் பிலிப்ஸ் ஷீத்தல் ஆகியோர் ஆகியோர் தயாரித்திருந்தனர். விமல், சமுத்திரகனி மற்றும் புன்னகை பூ கீதா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
திரையுலகினர் இரங்கல்
ஆனால் வசூல் ரீதியாக தோல்வியையே தழுவியது. இதற்கு பின்னர் அவர் திரைப்படம் எதையும் இயக்கவில்லை. பல முன்னணி இயக்குனர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனையோடு பதிவிட்டுள்ளார். தொடர்ந்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.