காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய நடிகை விலகல் - ரசிகர்கள் சோகம்

kaatrukennaveli
By Petchi Avudaiappan Oct 27, 2021 12:14 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான மீனாட்சி என்ற பாத்திரத்தில் நடித்து வரும் நடிகையும் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

சீரியல்களுக்கு பஞ்சமே இல்லாமல் செயல்பட்டு வரும் விஜய் டிவியில்  காற்றுக்கென்ன வேலி என்ற சீரியல் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே இந்த சீரியலில்  இருந்துப் இரண்டு நடிகர்கள் வெளியேறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

காற்றுக்கென்ன வேலி சீரியலில் ஹீரோவாக நடித்த சூர்ய தர்ஷன் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தவுடன் சீரியலில் இருந்து வெளியேற இருப்பதாக தகவல் வெளியானது. சூர்யா தர்ஷனுக்கு ஏகப்பட்ட பெண் ரசிகர்கள் உள்ளதால் அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என்ற குழப்பத்தில் படக்குழுவினர் உள்ள நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. 

சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் ஒன்றான மீனாட்சி என்ற பாத்திரத்தில் நடித்து வரும் நடிகையும் சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை சுஜாதா பஞ்சு தான் அந்த கேரக்டரில் நடிக்கவுள்ளார். இவர்  கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான பேரழகி சீரியலில் நாயகனின் அம்மாவாக நடித்து சின்னத்திரையில் புகழ் பெற்றவர். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.