குஷி, பாகுபலி, டைட்டானிக், நானும் ரௌடி தான் படங்களின் கலவையாக மாறிய “காத்து வாக்குல ரெண்டு காதல்”
நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள படம் "காத்து வாக்குல ரெண்டு காதல்". இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி காத்து வாக்குல ரெண்டு காதல் தியேட்டர்களில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் குஷி, பாகுபலி, டைட்டானிக், நானும் ரௌடி தான் என பல படங்களை விக்னேஷ் சிவன் மையப்படுத்தி காட்சிகளை அமைத்துள்ளார். மேலும் . நயன்தாரா, சமந்தா இருவரையும் விஜய் சேதுபதி காதலிப்பதால் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஜாலியாக சொல்வது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
படத்தின் தமிழ்நாடு திரையரங்கு விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.