காட்பாடி சட்டமன்ற தொகுதியில் வெற்றிப்பெற்றதற்கான சான்றிதழை துரைமுருகனிடம் வழங்கினார் தேர்தல் அலுவலர்
காட்பாடியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இடம் தேர்தல் நடத்தும் அலுவலர் புண்ணியகோடி வழங்கினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணும் பணிகள் இன்று காலை தொடங்கின. இந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக அதிக இடங்களைப் பெற்று தமிழகத்தின் புதிய முதல்வராக முக ஸ்டாலின் தேர்வானார்.
முன்னதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் அவர்கள் போட்டியிட்ட காட்பாடி சட்டமன்ற தொகுதியில் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்தார். அதன் பின் வாக்குகள் என்னும் நேரம் செல்ல செல்ல துறை முருகன் பக்கம் வெற்றி திரும்பியது.
அந்த தொகுதியில் துரைமுருகன் 746 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
காட்பாடி தொகுதியில் போட்டியிட வேட்பாளர்களும் அவர்கள் பெற்ற வாக்குகளும்,
1. துரைமுருகன் ( திமுக வேட்பாளர்) - 85140
2. ராமு ( அதிமுக வேட்பாளர்) - 84394
3. ராஜா ( அமமுக வேட்பாளர்) -1040
4. திருக்குமரன் (நாம் தமிழர் கட்சி) -10479
5. சுதர்சன் ( இந்திய ஜனநாயக கட்சி , மக்கள் நீதி மையத்தின் கூட்டணி ) - 1006
6.நோட்டா - 1889