எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் சிறுநீர் வரவில்லை : வித்யாசமான நோயால் தவிக்கும் இளம் பெண்
பிரிட்டன் நாட்டில் ஒரு இளம் பெண் சிறுநீர் கழிக்க முடியாத அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இயற்கையில் சில மனிதர்களுக்கு அரிய வகை நோய்கள் ஏற்பட்டு அவர்கள் வாழ்க்கையே புரட்டி போட்டு விடும் அளவுக்கு மாற்றிவிடுகிறது. அப்படித்தான் பிரிட்டன் நாட்டில் ஒரு இளம் பெண்ணுக்கு வந்த அரிய வகை நோய் அவரை சுமார் ஒன்றரை ஆண்டுகளாக தவிக்க வைத்துள்ளது. பிரிட்டன் நாட்டின் லண்டன் நகரில் வசிக்கும் 30 வயது பெண் எல்லே ஆடம்ஸ். இவர் எந்த வித உடல்நலக்குறைவும் இல்லாமல் 2020 அக்டோபர் வரை சிறப்பாக வாழ்ந்துவந்துள்ளார்.
இந்நிலையில், 2020 அக்டோபர் மாதம் ஒரு நாள் இரவு வழக்கம் போல தூங்கி மறு நாள் எழுந்து கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால், அன்றய தினம் அவருக்கு சிறுநீர் வரவில்லை. சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினாலும் அவருக்கு சிறுநீர் வெளியேறவில்லை. பதற்றமடைந்த அவர் தண்ணீர் உள்ள நீர் ஆகாரங்களை அதிகம் குடித்தார் அப்படி இருந்தும் அவரால் அன்று சிறுநீர் கழிக்க முடியவில்லை
விநோத பிரச்சினை
பதற்றமடைந்த அவர் அருகே உள்ள மருத்துமனைக்கு சென்று தனது பிரச்சனையை கூறியுள்ளார். அவரது சிறுநீர் பையில் சுமார் ஒரு லிட்டர் சிறுநீர் தேங்கி இருப்பதாக மருத்துவர்கள் பரிசோதித்து கூறியுள்ளனர்.
இவருக்கு ஒரு லிட்டர் சிறுநீர் இருந்தும் அது வெளியேறவில்லை. உடனடியாக மருத்துவர்கள் டியூப் செலுத்தி செயற்கை முறையில் சிறுநீரை வெளியேற்றினர். ஏதோ பதற்றம் காரணமாக தான் இந்த பிரச்சனை வந்துள்ளது யோகா செய்து நன்கு தூங்குங்கள் பிரச்சனை சரியாகி விடும் என பெண்ணிடம் மருத்துவர்கள் கூறியுள்ளனர்
தவிக்கும் இளம் பெண்
இதனால் பாதிக்கப்பட்ட எல்லே ஆடம்ஸ் கடந்த 14 மாதங்களாக சிறுநீர் கழிக்கமுடியாமல் அவதிபட்டு வந்துள்ளார். பின்னர் இவருக்கு catheter என்ற சிகிச்சை வழங்கப்பட்டு அதன் மூலமாக சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நன்றாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கை திடீரென மாறிப்போனதாக கூறும் எல்லே, இந்த பிரச்சனையை தவிர மற்ற எந்த உடல் நல பிரச்சனையும் தனக்கு இல்லை என்கிறார்.
catheter என்ற மருத்துவ முறைப்படி தனது சிறுநீரை வெளியேற்றி வரும் இவர் Sacral Nerve Stimulation என்ற சிகிச்சையை பெற்று வருகிறார். இந்த சிகிச்சை இவரது பிரச்சனையை சற்று மேம்படுத்தி பாதிப்பை பாதியாக குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலக்கீழ் தளத்தில் கொல்லப்பட்ட முக்கிய தளபதி: சடலத்தை இரகசியமாக சுரங்கத்தினுள் புதைத்த ஹமாஸ் IBC Tamil
