பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

Tamil Cinema Death
By Thahir 1 மாதம் முன்
Report

பிரபல இயக்குநரும், நடிகருமான கே.விஸ்வநாத் வயது மூப்பு காரணமாக காலமானார்.

தமிழ் சினிமாவில் அசாத்திய நடிப்பு 

1965 ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமான கே.விஸ்வநாத், முதன் முதலில் ஆத்ம கவுரவம் என்ற படத்தை இயக்கினார். அப்படத்திற்கு சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த படத்துக்கான விருதை வென்றார்.

தமிழில் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் குருதிப்புணல், முகவரி, ராஜபாட்டை, யாரடி நீ மோகினி, லிங்கா, உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

k.viswanath passed away

92 வயதான கே.விஸ்வநாத் . வயது மூப்பால் கடந்த சில காலங்களாக சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர் ஐதராபாத்தில் தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வந்தார்.

நள்ளிரவு காலமானார்

இந்த நிலையில் ஐதராபாத் இல்லத்தில கே.விஸ்வநாத் நேற்று நள்ளிரவு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்துள்ளது. 7 முறை நந்தி விருது, 5 முறை தேசிய விருது ஆகியவைகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.   

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.