ஊழல் பட்டியலை விட விலைவாசி பட்டியலை முதலில் படிங்க அண்ணாமலை - கி.வீரமணி பேச்சு!

DMK BJP K. Annamalai
By Sumathi Jun 11, 2022 03:27 PM GMT
Report

தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதற்கு திராவிட மாடல் ஆட்சிதான் காரணம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மூன்று நாட்கள் நடைபெற்றது. இதில் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு வீரமணி பயிற்சியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து பேசினார்.

ஊழல் பட்டியலை விட விலைவாசி பட்டியலை முதலில் படிங்க அண்ணாமலை - கி.வீரமணி பேச்சு! | K Veeramani Press Meet

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி. வீரமணி, கடந்த 42 ஆண்டுகளாக குற்றாலத்தில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை மாணவர்களுக்காக நடத்தப்பட்டு வருகிறது.

திராவிட மாடல்

திராவிட மாடல் ஆட்சியில் அடிப்படை தத்துவமே இது என்பதால் ஏராளமான இளைஞர்கள் இதில் ஆர்வமுடன் இணைகிறார்கள். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் நூபுல் சர்மா பேசியது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்படிப் பேசியவர்கள் வெறும் கருவிதான். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பதை விட இதற்கு யார் காரணம் என்று ஆராய்ந்தால் ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தான் இதற்கான அம்பு என்று தெரியவரும்.

இந்த வெறுப்பு பிரச்சாரம் உலக அளவில் நமது பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்பையும் பாதிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

வளைகுடா நாடுகள் உட்பட 5 பேர் இஸ்லாமிய நாடுகளில் நாடுகளில் கண்டித்துள்ளன இதன் விளைவுகள் என்னவென்றால் பெட்ரோல் இறக்குமதி இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பு போன்றவை பாதிக்கப்படும்.

இவர்களது இந்த பேச்சை பிரதமரோ பாரதிய ஜனதா கட்சித் தலைவரோ இதுவரை கண்டிக்காதது ஏன்? இந்தியாவிலேயே தமிழகம்தான் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது.

இதுவரை இந்து மதக் கலவரம் ஒரு ஜாதிக் கலவரமாக வந்ததில்லை அனைத்து மதத்தினரும் அனைத்து மக்களும் சாதி சமய வேறுபாடு இன்றி ஒற்றுமையாக இருக்கிறார்கள்.

விரும்பிய உணவை உண்ண முடிகிறது விரும்பிய இடங்களுக்குச் செல்ல முடிகிறது . இதனுடைய தனிச்சிறப்பு தான் திராவிட மாடல். அண்டை மாநிலமான கர்நாடகத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை.

ஆதீனம் என்ற ஒன்றையே திராவிட இயக்கங்கள் தான் காப்பாற்றி உள்ளது. திராவிட இயக்கம் இல்லை என்றால் ஆதீனங்களே இல்லை. அது தெரியாமல் ஆதீனம் சம்பந்தப்பட்டவர்கள் பேசுகிறார்கள்.

பாஜக தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியலை படிப்பதைவிட அதிகப்படியாகவே இருக்கும் விலைவாசி பட்டியலை முதலில் படிக்க வேண்டும்.

பிரதம மந்திரி அறிவித்த வேலைவாய்ப்பு திட்டங்களை நிறைவேற்றினாரா என்பதை தெரிவித்துவிட்டு ஊழல் பட்டியலை கையில் எடுக்கட்டும், ஓராண்டு திமுக ஆட்சியில் எண்ணற்ற சாதனைகள் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது

நிதி நிலைமை இன்னும் சீரடையும் பட்சத்தில் பல்வேறு நலத்திட்டங்களையும், வரியில்லா உபரி பட்ஜெட்டையும் இந்த ஆட்சி தாக்கல் செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார்.