ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகள் முடக்கம் - காவல் துறை அதிரடி
பண மேசாடி வழக்கில் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜின் வங்கி கணக்கை காவல்துறை முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 3 கோடி மோசடி செய்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா,பெங்களுர்,திருச்சி,சென்னை,உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
ராஜேந்திர பாலாஜி சினிமா பாணியில் காரை மாற்றி மாற்றி தப்பிச்செல்வதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க கடந்த 23ஆம் தேதி அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரின் நகர்வுகளை தடுக்கும் வகையில் அவரின் வங்கி கணக்கை காவல்துறையினர் முடக்கியுள்ளனர்.