ராஜேந்திர பாலாஜியை நெருங்கிவிட்டோம்...விரைவில் கைது..அமைச்சர் ரகுபதி பேட்டி
ராஜேந்திர பாலாஜியை தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரை நெருங்கிவிட்டதாகவும் கூடிய விரைவில் கைது செய்வோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இவ்வாறு கூறினார்.
மேலும், 7 பேர் விடுதலை குறித்து ஆளுனர் முடிவெடுப்பதற்காக காத்திருக்கிறோம். 2022ல் அவர்களின் விடுதலை செய்தி அனைவருக்கும் கிடைக்கும் என்ற அமைச்சர்,
தமிழக மீனவர்களை விடிவிக்க கடந்த காலம் போல் வெளியுறவு அமைச்சகத்துடன் பேசி மிக விரைவில் விடுவிப்போம் என்றும் கூறினார்.
நீட் தேர்வை ரத்து செய்வதற்கான எல்லா முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்துவருகிறது, நீட் தேர்வு ரத்து என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று உறுதியாகக் கூறியவர்,
ஜல்லிக்கட்டை பொருத்த வரை ஒமைக்ரான் தொற்று பரவுதல் மற்றும் கூட்டம் கூடுவதை கவனத்தில் கொண்டுதான் நடத்துவதா? வேண்டாமா என்பதை அரசு முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.