கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ சர்ச்சை - அண்ணாமலையின் புதிய ஆடியோ வெளியீடு
கடந்த செவ்வாய்கிழமை கே.டி ராகவன் ஒரு இளம் பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து தனது கட்சி பதவிகளை ராஜினாமா செய்தார் கே.டி.ராகவன்.
சர்ச்சை வீடியோவை தான் பாஜக மாநில தலைவரை கேட்டு தான் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டதாக தெரிவித்தார்.
அண்ணாமலைக்குத் தெரிந்துதான் கே.டி. ராகவன் காணொலி வெளியிடப்படுகிறது என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், கே.டி. ராகவனின் பெண்கள் தொடர்பான சர்ச்சை விடியோவை யூடியூபர் தன்னிடம் காட்டவில்லை, தான் பார்க்கவில்லை எனத் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, விடியோவை வெளியிட்ட யூடியூபர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின்னர், விடியோ வெளியிட்ட அவரின் சேனலையும் யூடியூப் நிறுவனம் முடக்கியது.
இந்த நிலையில், சர்ச்சை விடியோவை வெளியிட்ட யூடியூபரின் முகநூல் கணக்கிலிருந்து கே.டி. ராகவன் சர்ச்சை விடியோ தொடர்பாக அண்ணாமலையுடன் பேசிய ஆடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த ஆடியோவில், கே.டி. ராகவனின் சர்ச்சை விடியோவை அண்ணாமலையிடம் காட்டும்போது நடத்தப்பட்ட உரையாடல் இடம் பெற்றுள்ளது. தேவைப்பட்டால் விடியோ பதிவையும் வெளியிடுவதாகவும் மதன் ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.