பேரறிவாளன் விடுதலையை கண்டித்து நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி அழைப்பு

By Nandhini May 18, 2022 09:36 AM GMT
Report

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது பிணையில் இருந்த பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார்.

சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவத்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்யக் கோரிய வழக்கில் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் கடந்த வாரம் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்பளித்து உத்தரவிட்டனர். மேலும், ஆளுநர் 161வது பிரிவில் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142 சட்டப்பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்வதாக உத்தரவிட்டனர். 

பேரறிவாளன் விடுதலையை பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்று கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

இந்நிலையில், பேரறிவாளன் விடுதலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர், பேரறிவாளன் விடுதலையை கண்டித்து நாளை வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் நாளை காலை 10 மணி முதல் 11 மணி வரை அறப்போராட்டம் நடத்த கட்சியினருக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். 

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து நாளை காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி அழைப்பு | K S Alagiri