“இதுக்கா ரூ.5 கோடி வாங்குன” - நயன்தாராவை விளாசிய பிரபல தயாரிப்பாளர்
பட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் கே.ராஜன் நடிகை நயன்தாராவை சரமாரியாக விமர்சித்துள்ளார்.
சோனியா அகர்வால் நடித்திருக்கும் கிராண்மா பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது எங்க ஆடியோ விழாவில் தான் தமிழ் படத்தில் நடித்த ஹீரோயின் வர மாட்டார்கள். தற்போது நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் ஹீரோயின் ஒரு பேட்டி கொடுக்கிறார். நீங்க ஏன் உங்களின் பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு போவது இல்லை என்று கேட்கப்படுகிறது.
இல்லை, நான் போயி நல்லா இருக்குனு சொல்லி, அது ரிலீஸாகி ஃபெயிலியராச்சுனா, அது எனக்கு கெட்ட பேரு. நீ நடிச்சு படம் ஃபெயிலியராகுறதுக்கா ரூ. 5 கோடி வாங்குன?. நடிக்கும்போதே நினைச்சுக்குவியா, அந்த படம் ஃபெயிலியராக வேண்டும்னு?. ஆனால் அவங்க நடிச்ச ஒரு படம், நெற்றிக்கண். அதுக்கே ப்ரொமோஷனுக்கு வரல. அதுவும் அவங்க சொந்தப்படம். இது எவ்வளவு கேவலமாக இல்லீங்க. இங்கே இருக்கிற தமிழன் சரியில்ல என்றார்.
நயன்தாரா தான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதே, விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வர மாட்டேன் என்று கூறிவிடுவது வழக்கம். அதேபோல் தயாரிப்பாளர் கே.ராஜன் நயன்தாரா, த்ரிஷா ஆகியோரை கடந்த சில மாதங்களாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.