அவரையெல்லாம் நான் மதிக்கவே மாட்டேன்... - அஜீத்தை கடுமையாக திட்டிய பிரபல தயாரிப்பாளர்..! - ரசிகர்கள் ஷாக்...!
நடிகர் அஜீத்தை நான் மதிக்கவே மாட்டேன் என்று பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளதால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் அஜீத்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜீத். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ‘தல’ என்று இவரை ரசிகர்கள் அன்போடு அழைத்து வருகிறார்கள்.
வலிமை
சமீபத்தில் நடிகர் அஜீத்தின் 60-வது படமாக உருவான‘வலிமை’ திரைப்படம் வெளியானது. இப்படத்தை போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கினார். இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்தார். இப்படம் ‘பாக்ஸ் ஆபிஸி’ல் வசூலை வாரி குவித்தது.
சில்லா, சில்லா பாடல் வெளியீடு
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து எச். வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிகர் அஜீத் நடித்துள்ள படம் துணிவு. இப்படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 9ம் தேதி அஜித் நடித்துள்ள ‘துணிவு’ படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ வெளியானது. இப்பாடல் வெளியாகிய சிறிது நேரத்திலேயே பல லட்சக்கணக்கான மக்களின் இதயத்தை கொள்ளையடித்தது. தற்போது வரை சமூகவலைத்தளத்தில் இப்பாடலுக்கு அஜீத்தின் ரசிகர்கள் லைக்குகளை அள்ளிப்போட்டு தெறிக்க விட்டு வருகின்றனர்.
அஜீத்தை மதிக்க மாட்டேன் -
இந்நிலையில், நடிகர் அஜித்தை நான் மதிக்கவே மாட்டேன் என்று பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளதால் தற்போது தமிழ் சினிமாவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில்,
நடிகர் அஜீத் பாலிவுட் திரையுலகை சேர்ந்த போனி கபூரின் தயாரிப்பில் தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ் பட தயாரிப்பாளர்களுக்கு அவர் வாய்ப்பே கொடுப்பதில்லை.
இதைப்பற்றி நான் எப்படி அவரிடம் பேச முடியும். அவர் வெளியே வந்து ரசிகர்களை சந்தித்தால் தானே பேசமுடியும். வீட்டிலிருந்து ஸ்டுடியோவிற்கு செல்கிறார். படப்பிடிப்பு முடிந்த பிறகு உடனே ஸ்டுடியோவிலிருந்து வீட்டிற்கு சென்று விடுகிறார். ரசிகர்களை கூட அவர் சந்திப்பதே கிடையாது. மதிப்பதும் கிடையாது. அப்படி இருக்கும் நடிகர்களை நான் மதிக்கவே மாட்டேன் என்று கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.
நடிகர் அஜீத்தை நான் மதிக்கவே மாட்டேன் என்று பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ள சம்பவம் அஜீத் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.