திருவிழாவில் செய்தியாளரை மிரட்டிய அமைச்சர் பெரியகருப்பன் - வைரலாகும் வீடியோ
சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், நேற்று சிவகங்கையில் இளைஞர் திறன் திருவிழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொள்ள இருந்தார். இவருடைய வருகைக்காக பல மணி நேரம் இளைஞர்கள், அதிகாரிகள் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அவர் வரவே இல்லை.
பல மணி நேரமாக இளைஞர்கள் மற்றும் அதிகாரிகள் காத்திருப்பதாக செய்தி வெளியிட்ட பிரபல தொலைக்காட்சி செய்தியாளர் சிதம்பரத்தை, மிக நீண்ட நேரம் கழித்து காரில் வந்த அமைச்சர் பெரியகருப்பன் மிரட்டியுள்ளார்.
இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரது செயலுக்கு பலர் தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
சிவகங்கையில் இளைஞர் திறன் திருவிழாவில் அமைச்சருக்காக பல மணி நேரமாக இளைஞர்கள். அதிகாரிகள் காத்திருப்பதாக, செய்தி வெளியிட்ட @News18TamilNadu செய்தியாளர் சிதம்பரத்தை அமைச்சர் பெரியகருப்பன் மிரட்டும் வீடியோ @CMOTamilnadu | @mkstalin | @vetridhaasan pic.twitter.com/ra7ULCBAao
— மகாலிங்கம் பொன்னுசாமி / Mahalingam Ponnusamy (@mahajournalist) July 19, 2022