அதிமுக வரலாறு காணாத தோல்வி... - கே.சி.பழனிசாமி பேட்டி..!
அதிமுக வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளதாக அதிமுக முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் வெற்றி பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 51,168 வாக்குகுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
11வது சுற்றில், காங்கிரஸ் - 83,528 வாக்குகளும், அதிமுக 32,360 வாக்குகளும் பெற்றுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கையில் சுமார் 50,000+ வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.
அதிமுக வரலாறு காணாத தோல்வி
இந்நிலையில், அதிமுக இதுவரையில் இல்லாத வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது என்று அதிமுக முன்னாள் நிர்வாகி கே.சி.பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் அதிமுக தொண்டர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. அதிமுக இதுவரையில் இல்லாத வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு அனைத்து தேர்தல்களிலும், மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால், மக்களிடம் அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.