பாடகர் கே.கே உடலுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி - துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை

By Nandhini Jun 01, 2022 10:52 AM GMT
Report

52 வயதான பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் என்ற கேகே தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். 1990களில் அவர் பாடிய பால் மற்றும் யாரோன் போன் பாடல்கள் மிகவும் பிரபலமானது.

இவர் தமிழில் கில்லி,தாமிரபரணி,ஆடுகளம்,ஐயா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பாடியுள்ளார். நேற்று இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு பின்னர் தங்கியிருந்த ஹோட்டலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினர்.

இவரின் மரணச் செய்தியை கேட்டு அவரது ரசிகர்களும், சினிமாத்துறையினரும் சோகத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள ரபீந்திர சதனில் வைக்கப்பட்டுள்ள பிரபல பாடகர் கே.கே.வின் உடலுக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பாடகர் கே.கே. உடலுக்கு அரசு சார்பில், துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டது.   

இதன் பின், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசுகையில், என் சகோதரனை நான் இழந்துவிட்டேன் என்று உருக்கமாக தெரிவித்தார். 

பாடகர் கே.கே உடலுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி - துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை | K K Singer Death Mamata Banerjee