‘யார் அந்த கே.கே? - அவரை விட நாங்கள் நன்றாகவே பாடுகிறோம்...’ - பாடகர் சர்ச்சை பேச்சு... - பதிலடி கொடுத்த பிரபல நடிகை
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 மணி நேரத்திற்கு முன்பு கொல்கத்தா ஆடிட்டோரியத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின் காட்சிகள் உள்ளது. 52 வயதான பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் என்ற கேகே தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். 1990களில் அவர் பாடிய பால் மற்றும் யாரோன் போன் பாடல்கள் மிகவும் பிரபலமானது.
இவர் தமிழில் கில்லி,தாமிரபரணி,ஆடுகளம்,ஐயா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பாடியுள்ளார். நேற்று இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு பின்னர் தங்கியிருந்த ஹோட்டலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினர்.
இவரின் மரணச் செய்தியை கேட்டு அவரது ரசிகர்களும், சினிமாத்துறையினரும் சோகத்தில் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், பெங்காலி பாடகர் ஒருவர் கே.கே.வை விமர்சனம் செய்து பேசியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாடகர் கே.கே. இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் ரூபங்கர் பாக்ச்சி என்பவர், “யார் கே.கே? நாங்கள் அவரை விட சிறந்த பாடகர்கள் என குறிப்பிட்டு பேசியிருக்கிறார். ஃபேஸ்புக் லைவ் லைவின் போது ரூபங்கர் பாக்ச்சி; KK பற்றி தனது கருத்துக்களை முன்வைத்து பேசினார். அந்த லைவ்வில் அவர் பேசும்போது, கே.கேவின் பாடல்களைக் கேட்ட பிறகு, நாம் அனைவரும் K.K ஐ விட நன்றாகப் பாடுகிறோம் என்பதை நான் உணர்ந்தேன். அது என்ன ஹைப்? இது KK, KK, KK யார் கே? நாம் எந்த K ஐ விடவும் சிறந்தவர்கள் என்று ரூபாங்கர் பேசினார்.
இவருடைய பேச்சு தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு தக்க பதிலடி கொடுப்பதற்காக பெங்காலி நடிகை ரூபஞ்சனா மித்ரா பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், மறைந்த பாடகர் பற்றிய "உணர்ச்சியற்ற" கருத்துக்காக பாக்சியை சாடியுள்ளார். “அவமானம் மிஸ்டர் ரூபாங்கர் பாக்சி!!! நீங்கள் ஒரு சுயநல ஆன்மாவைத் தவிர வேறொன்றுமில்லை, ”என்று அவர் பேஸ்புக் பதிவில் எழுதினார். "முதலில் உங்கள் குறுகிய மனப்பான்மையை சரிசெய்து கொள்ளுங்கள், பின்னர் உங்களை KK உடன் ஒப்பிடுங்கள். அவரைப் போன்ற பாடகரை இழிவுபடுத்த உங்களுக்கு உரிமை இல்லை. ஆம், நான் ஒரு KK ரசிகை மற்றும் நீங்கள் உங்கள் பொறாமையை வெளிப்படுத்திய விதம் மிகவும் வேதனைக்குரியது.,” என்று கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.