கே.சி.வீரமணி வீட்டில் 9 சொகுசு கார்கள், கட்டுகட்டாக பணம், 5 கிலோ தங்கம் பறிமுதல்
முன்னால் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் 18 மணி நேரத்திற்க்கு மேல் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்த நிலையில்
நேற்று காலை 5.30 மணி முதல் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் வீடு, சகாதரர்கள், உறவினர்கள் வீடு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது.
18 மணி நேர சோதனைக்கு பிறகு ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி வீட்டில் சோதனையில் மொத்தம் ரூ.34 லட்சம் ரொக்கம், 1 லட்சத்தி 80 ஆயிரம் மதிப்பிலான டாலர், ரோல்ஸ் ராயல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளி, 47 கிராம் வைர நகைகள், 5 கம்யூட்டர், ஹாட்டிஸ்க், வங்கி கணக்கு புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
மேலும் 30 லட்சம் மதிப்பிலான மணலும் கணக்கில் வரவழைக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் காரில் வெளியேறும் போது கார்கள் மீது அங்கு கூடியிந்த அதிமுகவினர் பலமாக தாக்குதல் நடத்தினர்.
சோதனை முடிந்த பின்னர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.அப்போது கூறியதாவது:-
நேரத்தை வீன் அடித்து அரசியல் விளம்பரம் தேட செய்யப்பட்டது இந்த சோதனை. வரலாற்றில் பல்வேறு சோதனைகளை கடந்து வந்துள்ளோம்.
முன்னால் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியம். அரசியல் காழ்புணர்ச்சிக்காக 5 ஓன்றிய கழக செயலாளார்கள், கழகத்தின் பல்வேறு பொறுப்பாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்துவது.
அடிமட்ட உறுப்பினர்கள் வீட்டில் சோதனை நடத்துவது இதுவரை அரசியல் வரலாற்றில் இல்லை. சோதனை என்ற பெயரில் அரசியல் காழ்ப்புணர்ச்சி.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இருக்கின்றோம். உள்ளாட்சி தேர்தலில் இடையூறுகளை ஏற்படுத்து வதற்க்காகவே இது போன்ற ஆளும் கட்சியினர் ரெய்டு என்ற பெயரில் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நாங்கள் எதையும் நீதி மன்றத்தின் வாயிலாக சந்திக்க தயாராக உள்ளோம். இன்றைக்கு நடைபெற்ற சோதனையில் அவர்களுக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கிறார்கள்.
நீதிமன்ற வாயிலாக எந்த வழக்கு தொடுத்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம். தேர்தல் களமானாலும், நீதிமன்றமானாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் எந்தவிதத்தில் சந்திக்க வேண்டுமோ அதற்க்கு தயாராகவே இருக்கிறோம்.
ரெய்டுபோன்ற அச்சுறுத்தல்களையெல்லாம்
கடந்த காலத்தில் கடந்து வந்தவர்கள்.
50 ஆண்டை கடந்த கட்சி அதிமுக. எதிர்வாரும் பல 100 ஆண்டுகளாலுக்கும் இயக்கம் வளர்வதற்க்கும் உறுதுணையாக இருப்போம் என்றார்.