முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
முன்னாள் அதிமுக அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சராக இருந்தவர் கே.சி.வீரமணி. இவர் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.90 கோடி அளவிற்கு சொத்து குவித்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து இன்று (செப்.,16) காலையில் இருந்து சென்னை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்பட 20க்கும் மேற்பட்ட வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்டது.
பெங்களூருவிலும் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்து வருகிறது. அதேபோல், திருவண்ணாமலையின் குருவிமலை கிராமத்தில் உள்ள வீரமணியின் உறவினர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.