வாய் கொடுத்து மாட்டிக்கொண்ட பாக்யராஜ் - மாற்று திறனாளிகள் கடும் கண்டனம்

Condemnation Speech K.Bhagyaraj Alternative-Talents
By Nandhini Apr 20, 2022 11:28 AM GMT
Report

சமீபத்தில் புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டது.

இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றும், மோடிக்கும், அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இளையராஜாவின் இந்தக் கருத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

சமீபத்தில், இளையராஜாவின் மகன் யுவன்சங்கர் ராஜா தனது இன்ஸ்டா பக்கத்தில், கருப்பு உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, கறுப்பு திராவிடன், பெருமைமிக்க தமிழன் என்று பதிவிட்டிருந்தார். இதனால், சமூகவலைத்தளங்களில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது.

‘நீ கருப்பு என்றால், நான் அண்டங்காக்க கருப்பு’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தது பெரும் பேசும்பொருளாக மாறியது.

இதனையடுத்து, பலர் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

"பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் - புதிய இந்தியா 2022" என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட, திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

அப்போது, பாக்யராஜ் பேசுகையில், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், தன் மீதான எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், பிரதமர் மோடி அதைப் பற்றி செவி சாய்க்காமல் இருக்கிறார் என்று கருத்து தெரிவித்தார்.

குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று அவர்சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்சி என்று சமூக வலைதளங்களில் மாற்றுத்திறனாளிகள் உட்பட பலர் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி, அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா நடிகர் பாக்கியராஜ் அவர்களே? அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்சி, நாங்கள் இயற்கையின் அங்கமில்லையா? எங்களுக்கும் மான உணர்ச்சி உண்டு ஐயா! தொடர்ந்து அரசியல்வாதிகள் புண்படுத்துகிறார்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.   

வாய் கொடுத்து மாட்டிக்கொண்ட பாக்யராஜ் - மாற்று திறனாளிகள் கடும் கண்டனம் | K Bhagyaraj Speech Alternative Talents