என் வாத்தியார் கே.பாலச்சந்தர் - நடிகர் கமல் உருக்கம்!

kamal birthday wish k balachander
By Anupriyamkumaresan Jul 09, 2021 10:33 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சினிமா
Report

சினிமாவின் அத்தனை வகைமைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் என் வாத்தியார் கேபி” என்று இயக்குநர் கே.பாலச்சந்தரின் பிறந்தநாளையொட்டி, நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

என் வாத்தியார் கே.பாலச்சந்தர் - நடிகர் கமல் உருக்கம்! | K Balachander Birthday Kamal Wish

இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில்தான் நடிகர் கமல்ஹாசன் முதன்முறையாக ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்பே, குழந்தை நட்சத்திரமாக ‘களத்தூர் கண்ணமா’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் ஹீரோவாக நடித்தது அபூர்வ ராகங்கள் படத்தில்தான்.

இந்த நிலையில், இன்று கே.பாலச்சந்தரின் 91 வது பிறந்ததினத்தை திரைத்துறை கொண்டாடி வருகிறது. இதனையொட்டி நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், சினிமாவின் அத்தனை வகைமைகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர் என் வாத்தியார் கேபி.

என் வாத்தியார் கே.பாலச்சந்தர் - நடிகர் கமல் உருக்கம்! | K Balachander Birthday Kamal Wish

என்னுடைய 16-வது வயதில் அவருடனான அறிமுகம் ஏற்பட்டது. எங்கள் குரு சிஷ்ய உறவுக்கு இது பொன்விழா ஆண்டு. அமரர் கே.பாலச்சந்தர் அவர்களை அவரது 91-வது பிறந்தாளில் நினைவுகூர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.