பாஜக மீது கை வச்சா வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் - அண்ணாமலை கடும் விமர்சனம்

V. Senthil Balaji K. Annamalai BJP Vs DMK
By Thahir Oct 24, 2021 06:05 AM GMT
Report

பாரதிய ஜனதா கட்சி மீது கை வைத்தால் வட்டியும் முதலுமாக திருப்பி கொடுக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கட்டுமணி, கமிஷன் மணி, ஊழல் ஆரம்பித்து விட்டதாக நிறைய கட்டுரைகள் எழுதப்படுகிறது.

இன்னமும் தமிழக முதலவர் மௌனம் காண்பிப்பது ஏன்? ஆதிதிராவிட அமைச்சர் கயல்விழி வீட்டில் ஆதிதிராவிடர் விடுதியில் பணி செய்யக்கூடிய உறுப்பினர்களை சிஹிப்ட்டு போட்டு வேலை வாங்கப்படுகிறது.

ஆட்சி அமைத்து 5 மாதங்கள் தான்ஆகிறது. அதற்குள் இவ்வளவு பிரச்னைகள் ஆரம்பிக்கிறது. மத்திய அமைச்சர் பிரகலான் ஜோஷி இந்தியாவில் எங்கும் நிலக்கரி தட்டுப்பாடு வராது என கூறியுள்ளார்.

மழை காரணமாக தடை செய்யப்பட்ட தடையை கூட சரி செய்துள்ளார். ஆனால், தமிழக அமைச்சர் நிலக்கரி தொடர்பாக பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது.

ஏனெனில், நிலக்கரி ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யாமல் உள்ளனர். அதேபோல், மின்சாரத்தை ரூபாய் 20 க்கு வாங்கவில்லை எனக்கூறி தற்போது வாங்கியது தொடர்பாக கதை சொல்கிறார்கள்.

தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதற்கு தான் தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் வைத்திருப்பது தமிழக மக்களுக்கு மின்சார கொடுப்பதற்காக அல்ல, தமிழக மின்சார அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காக தான் இந்த வாரியம் செயல்படுகிறது.

முதலில், அணில் மீது பழியை போட்டார்கள். இந்த வாரில் 20 அணில் செத்துப்போய்விட்டது. மின் துண்டிப்புக்கான காரணம், தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்கு தான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை பயன்படுத்துகிறார்கள்.

இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு கிடையாது. இதேபோல் தான் தடுப்பூசி தட்டுப்பாடு கிடையாது. தற்போது 60 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி கையிருப்பு உள்ளது.

அரசியலுக்காக மட்டுமே தான் பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள்.ஆதாரப்பூர்வமாக அடிப்படையில் தமிழக அரசு குற்றம் சுமத்த எந்தவித முகாந்திரமும் கிடையாது.

திருட்டை கண்டுபிடிப்பதற்காக தான் அந்த ஆவணம் பரிமாறப்பட்டதே தவிர, அதை திருடி போடவில்லை. யாருக்கெல்லாம் மின்சாரத்திற்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக.

மார்ச் 2021 முதல் செப்டம்பர் 2021 வரை யாருக்கெல்லாம் பணம் நிலுவையில் உள்ளது என்பது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் ஒரு பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது.

அதில், பணம் கொடுத்ததாக நான் பரிமாறப்பட்ட நபர்களுக்கு முன் 4 % கமிஷன் கொடுக்காததால் காத்திருப்பில் உள்ளனர். லஞ்சம் இல்லாமல் இந்த அரசு செயல்படுகிறது?

லஞ்சம் இல்லாமல் பெரிய கான்டிராக்ட் நடக்கிறது? ஒரு அடிக்கு ஒரு தொகை வைக்காமல் கட்டிட அனுமதி கொடுக்கப்படுகிறதா? கட்டிட மாற்றுக்கு லஞ்ச்ம வாங்காமல் கொடுக்கின்றனரா? ஒரு அமைச்சர் ஆவது சொல்ல சொல்லுங்கள்.

இதே அமைச்சராவது 3 மாதங்கள் கழித்து பதவியில் இருந்தார் என்றால், prohibition , exercise பற்றி பேசுவோ. 3 மாதங்கள் தாக்கு பிடித்தால் பேசுவோம்.

தமிழகம் இனிமேல் தாங்காது. ஒரு குடும்பத்தின் வளம் காக்க, ஒரு குடும்பம் நன்றாக இருப்பதற்காக நேர்மையான அதிகாரியை ஊழல்வாதிகளாக மாற்றுகின்றனர்.

நேராமையாக நிறுவனம் நடத்த முயன்றால், அழைக்கழிக்கப்படுகிறார். சாதாரண மனிதர் ஊழல் வாதிகளாக மாறாமல் என்ன ஆகும்?

இந்த அரசு ஊழலை நிறுத்த வேண்டும், பில் clear செய்வதற்கு 4 %, contract க்கு 15 % என்ற நிலை தமிழகத்தில் உள்ளது.

பிரதமர் மோடி, ஊழல் செய்தவர்கள் எங்கு இருந்தாலும் தூக்கி கொண்டு வருவோம் என சொல்லியுள்ளார் . அது தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பொருந்தும். அமைச்சர் சேகர் பாபு, பாஜகவை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் என கூறியுள்ளதாக அறிகிறேன்,

தொட்டு பார்க்கட்டும், 17 மாநிலங்களில் ஆட்சி செய்கிறோம். மோடி டெல்லியில் உள்ளார். தொடுவார்கள் என காத்திருக்கிறோம், தொட்டு பார்க்கட்டும்.

ஒரு ஹார்பர் தொகுதியிலிருந்து சேகர் பாபு அரசியல் செயகிறார். பாஜக, 11 கோடி உறுப்பினர்கள் கொண்டது.என அவர் கடுமையாக விமர்சித்து பேசினார்.