மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு சொல்லவில்லை... - பாஜக தலைவர் அண்ணாமலை
மின்கட்டணம் உயர்வு
தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறித்தார். இந்த அறிவிப்பை கண்டித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
இன்று மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை உள்ளிடவற்றை கண்டித்து சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணாமலை காட்டம்
மேலும், கரூரில் மின் கட்டண உயர்விற்கு பாஜகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், இன்னும் 40 ஆண்டுகள் மத்தியில் பாஜக ஆட்சிதான் நடக்கும். மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த சொன்ன கடிதம் எங்கே என்று கேட்டோம், இதுவரை அது குறித்த பதில் இல்லை. தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு சொல்லவே இல்லை என்றார்.