அண்ணாமலை மீது கண்டிப்பா வழக்கு தொடரப்படும்? – அமைச்சர் நாசர் அதிரடி
ஆவின் தொடர்பாக அண்ணாமலை பேசிய கருத்துக்கு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர் தெரிவித்திருக்கிறார்.
அமைச்சர் எஸ்.எம்.நாசர் பேட்டி
கோவையில் உள்ள ஆவின் நிறுவனத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் எஸ்.எம். நாசர். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது -
எப்ப பார்த்தாலும், அண்ணாமலை, தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார். அதற்காக ‘நானும் ரவுடிதான்’ என்ற எண்ணத்தில் தமிழக அரசு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துக்கொண்டே வருகிறார். கடந்த பட்ஜெட்டின்போது தான் ஆவின் சுகாதார கலவை தயாரிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அப்படி இருக்க, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் 77 கோடி ரூபாய்க்கு வாங்கியதாக ஆதாரமற்ற பொய்யான தகவலை பரப்புகிறார் அண்ணாமலை. அவர் மீது கண்டிப்பாக வழக்கு தொடரப்படும் என்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.