Tuesday, Jun 17, 2025

ஆமாம்.. நான் ஒரு பொறுக்கி தான்.. - அமைச்சர் அன்பரசன் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி

Tamil nadu BJP K. Annamalai
By Nandhini 3 years ago
Report

பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை, அமைச்சர் அன்பரசன் பொறுக்கி என கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் அன்பரசன்

நேற்று நடந்த அரசு விழாவில் தமிழக அமைச்சர் அன்பரசன் கலந்து கொண்டார். அப்போது விழாவில் பேசுகையில், ‘அண்ணாமலை ஒரு பொறுக்கி என்றும் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது ரவுடிகளை அவர் வேட்டையாடினார். ஆனால் தற்போது ரவுடிகளை தனது கட்சியில் சேர்த்து வருகிறார்’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், பாஜக பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை, அமைச்சர் அன்பரசன் பொறுக்கி என கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

ஆமாம்.. நான் ஒரு பொறுக்கி தான்.. - அமைச்சர் அன்பரசன் பேச்சுக்கு அண்ணாமலை பதிலடி | K Annamalai

அண்ணாமலை பேச்சு

நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது -

திமுக அமைச்சர் அன்பரசன் கூறியதுபோல், நான் ஒரு பொறுக்கி தான். எப்படிப்பட்ட பொறுக்கி என்றால், திமுகவின் ஊழல்களை பொறுக்கி, வன்முறையை பொறுக்கி, திமுகவின் அராஜகத்தை பொறுக்கி வந்து மக்கள் மன்றத்தில் கொடுக்கும் பொறுக்கி. அதனால் இந்தப் பட்டத்தை நான் கம்பீரமாக ஏற்கிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.