இன்னும் 72 மணி நேரத்திற்குள் பெட்ரோல், டீசல் விலையை தமிழக அரசு குறைக்காவிட்டால்.... - அண்ணாமலை ஆவேசம்
K. Annamalai
By Nandhini
சென்னை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.
அப்போது அந்தப் பேட்டியில் கூறுகையில், பெட்ரோல், காஸ் விலை குறைப்பதாக கூறி திமுக ஆட்சிக்கு வந்தது.
இதனை நம்பி மக்களும் ஓட்டு போட்டனர். ஆனால், விலையை குறைக்காமல் அவர்கள் காரணங்களை கூறுவதை மக்கள் பார்க்க வேண்டும். திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 72 மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். அப்படி குறைக்காவிட்டால், கோட்டையை பாஜகவினர் முற்றுகையிடுவோம் என்றார்.