குண்டுகட்டாக வேனில் ஏற்றப்பட்ட ஜோதிமணி எம்பி : வைரலாகும் வீடியோ

Indian National Congress Viral Video
1 வாரம் முன்

டெல்லியில் நடந்த போராட்டத்தில் ஜோதிமணி எம்பி குண்டுகட்டாக கைதாகி வேனில் ஏற்றப்பட்டார்.

காங்கிரஸ் போராட்டம்

விலைவாசி உயர்வு, பண வீக்கம், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தை இன்று நாடு முழுவதும் நடத்தி வருகின்றனர் .

குண்டுகட்டாக  வேனில் ஏற்றப்பட்ட ஜோதிமணி எம்பி : வைரலாகும் வீடியோ | Jyotimani Was Loaded Into The Van As A Bomb

டெல்லியில் நடந்த போராட்டத்தில் தமிழக கரூர் எம்பி ஜோதிமணி பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் . கைது செய்யப்பட்டவர்களை போலீசார் வேனில் ஏற்றினார்கள்.

குண்டுகட்டாக  வேனில் ஏற்றப்பட்ட ஜோதிமணி எம்பி : வைரலாகும் வீடியோ | Jyotimani Was Loaded Into The Van As A Bomb

குண்டுகட்டாக தூக்கிய போலீசார்

வேனில் ஏற ஜோதிமணி எம்பி மறுப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அவரை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கி போலீசார் வேனில் ஏற்றினார்கள். இது குறித்த வீடியோ காங்கிரஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது .  

கடந்த முறை நடந்த போராட்டத்தில் ஜோதிமணி எம்.பி.அவரது ஆடை கிழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடந்த போராட்டத்திலும் அவர் குண்டுகட்டாக தூக்கி வேனில் ஏற்றப்பட்டிருக்கிறார்.  

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.