ஜோதிமணியின் ஆடை கிழிப்பு : வைரலாகும் வீடியோ

Indian National Congress
By Irumporai Jul 27, 2022 04:07 PM GMT
Report

போராட்டத்தில் காங்கிரஸ் எம்பி ஜோதி மணியின் ஆடை கிழிக்கப்பட்டு இருக்கிறது. குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றிய போது ஜோதி மணியின் ஆடை கிழிக்கப்பட்டு இருக்கிறது. இது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது .

ஜோதிமணி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஜூலை 18 ஆம் தேதியில் இருந்து தொடங்கி நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி உயர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.

ஆனால் மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது.   

ஜோதிமணியின் ஆடை கிழிப்பு : வைரலாகும் வீடியோ | Jyotimani Mp Clothes Ripped Shocking Video

இதனால் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கண்டித்து அவைக்கு உள்ளேயும் வெளியேயும் போராட்டம் நடத்தி வருகின்றார்கள். இதனால் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக சொல்லி மொத்தம் 23 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

ஆர்பாட்டம்

இதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பாஜக அரசு நடந்து கொள்ளும் விதத்தை கண்டித்தும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டதை கண்டித்தும் டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்ட காங்கிரசார் பேரணியாகச் சென்றார்கள். அவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். அப்போது ஜோதி மணியின் ஆடை கிழிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோவை வெளியிட்டு, எத்தனை முறை எங்கள் மீது அடக்குமுறையை ஏவினாலும் மீண்டும் மீண்டும் மக்களுக்காக போராடிக் கொண்டே இருப்போம் என்று ஆவேசத்துடன் கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது