என் பொண்டாட்டி வலிமையானவர்.. சூர்யாவின் காதல் பதிவு வைரல்
திரையுலகில் அனைவருக்கும் பிடித்த ஒரு காதல் ஜோடி என்றால் அது சூர்யா -ஜோதிகா தான். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் அஜித் ஷாலினிக்கு பிறகு இவர்களது ஜோடி தான் திரையுலகில் பிரபம் என்றே கூறலாம்.
இந்த நிலையில் சமீபகாலமாக ஜோதிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகாவுக்கு மீண்டும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும் , சூர்யா ஜோதிகாவின் படங்களை தயாரித்து வரும் நிலையில் ஜோதிகா நடிப்பில் அடுத்ததாக உடன்பிறப்பே என்ற திரைப்படம் நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் சமூக வலைதள பக்கம் தலை காட்டாமல் இருந்த ஜோதிகா முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹிமாலயா சென்ற புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய அக்கவுண்டை ஒபன் செய்துள்ளார்.
அவர் ஹிமாலயா சென்ற புகைப்படங்களை சூ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர சூர்யா அதற்கு என் பொண்டாட்டி வலிமையானவன் என்று கமெண்ட் கூறியுள்ளார். மேலும் ஜோதிகா இன்ஸ்டாகிராம் தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் பாலோயர்களை கடந்து விட்டதது எனபது குறிப்பிடத்தக்கது.