சொந்த கட்சிக்குள் பணப்பட்டுவாடா செய்த ஜோதிமணி : கொந்தளித்த அமெரிக்கை நாராயணன்
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை மொபைல் கடை நடத்திவரும் ஒருவர் தோற்கடித்துளளார். அதுவும், 37,558 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் சரண்ஜித் சிங்கை தோற்கடித்துள்ளார்.
பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன. தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆளும் காங்கிரஸ் 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் சரண்ஜித் சிங் சன்னி, அவர் போட்டியிட்ட இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்றான பதௌரில் தோல்வி அடைந்துள்ளார். இ
ந்த தொகுதியில் சரண்ஜித் சிங்கை தோற்கடித்துள்ளவர் பர்னாலா மாவட்டத்தில் உள்ள உகோகே கிராமத்தில் மொபைல் பழுதுபார்க்கும் கடை நடத்தி வரும் லப் சிங் என்பவர். 37,558 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் சரண்ஜித் சிங்கை தோற்கடித்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸின் இந்த தோல்விக்கு காரணம் சரியான தலமை இல்லாததுதான் காரணமாக கூறப்பட்ட நிலையில் இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் ஐபிசி தமிழ்நாடுக்கு அளித்த நேர்காணல் உங்களுக்காக
[