கே.டி.ராகவன் விவகாரம்: போலீசுக்கு போன ஜோதிமணி எம்.பி

annamalai ktragavan tnbjp jyothimanimp
By Petchi Avudaiappan Aug 24, 2021 04:22 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

 தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் மீது காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

தமிழக பாஜகவின் மாநில பொதுச்செயலாளராக இருந்த கே.டி. ராகவன் இடம் பெற்றதாக பாலியல் சர்ச்சைக்குள்ளான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தை யூ-ட்யூபர் மதன் வெளிச்சத்துக்கு கொண்டு வர பல்வேறு தரப்பில் இருந்தும் கே.டி. ராகவனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன.இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக கே.டி. ராகவன் அறிவித்தார்.

மேலும் “தமிழக மக்களுக்கும் கட்சியினருக்கும் நான் யாரென்று தெரியும். நான் என்னுடைய கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். சட்டப்படி சந்திப்பேன். தர்மம் வெல்லும்” என ட்விட்டரில் பதிவு ஒன்றையும் வெளியிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒரு விசாரணைக் குழு அமைத்து சாட்டப்பட்டிருக்கும் குற்றங்களில் வீடியோ பதிவுகளில் உள்ள உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இந்நிலையில் கே.டி. ராகவன் மீது கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் பெண்ணிடம் ஆபாசமாக நடந்து கொண்டதாக பா.ஜ.க.வின் கே.டி. ராகவன் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி இந்தியா முழுவதும் பாஜகவினரால் பெண்கள் அதிகளவில் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளதாக குற்றம் சாட்டினார்.