Wow... என்ன ஒரு Energy... தலைகீழாக நின்று Work Out செய்த ஜோதிகா - அசந்து போன ரசிகர்கள்...!
தலைகீழாக நின்று கடுமையாக உடற்பயிற்சி செய்யும் ஜோதிகாவின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர், நடிகைகளில் மிகவும் பிரபலமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா. திருமணத்திற்கு முன் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘உயிரில் கலந்தது’, ‘பேரழகன்’, ‘சில்லுனு ஒரு காதல்’ என பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர்.
கடந்த 2007ம் ஆண்டு இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டர். இத்தம்பதிகளுக்கு தியா, தேவ் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
தேசிய விருது
சூர்யா தன் மனைவி ஜோதிகா உடன் இணைந்து 2டி என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2020ம் ஆண்டுக்கான 68வது தேசிய விருது சமீபத்தில் பெற்றனர். மேலும், இவர்களது தயாரிப்பில் வெளிவந்த ‘சூரரைப் போற்று’ 5 தேசிய விருதுகளை பெற்று அசத்தியுள்ளது.
3 முறை தமிழக அரசு விருது பெற்ற ஜோதிகா, கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிகா பிறந்தநாள்
நேற்று நடிகை ஜோதிகா தன்னுடைய 44 வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் உட்பட பலர் சமூகவலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர்.
வைரலாகும் Work Out வீடியோ
இந்நிலையில், நடிகை ஜோதிகா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், இந்த பிறந்தநாளை வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் எனக்கு பரிசளிக்கிறேன். மிகவும் திறமையான மகேஷ் கனேகருடன் செயல்பாட்டு பயிற்சி. வயது என்னை மாற்ற அனுமதிக்க மாட்டேன் என் வயதை மாற்றுவேன் என்று பதிவிட்டுள்ளார்.
தற்போது இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியமடைந்து ஜோதிகாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.