அந்த மாதிரி படங்களில் 20 வருடம் முன்பு நடித்தேன்; தற்போது நிறுத்தி விட்டேன் - ஜோதிகா ஓபன் டாக்
பெண்களை மையப்படுத்தும் கதைகளில் நடித்து வருவதாக ஜோதிகா தெரிவித்துள்ளார்.
ஜோதிகா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவர்க்கும் ஜோடியாக நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார் ஜோதிகா. அதன் பிறகு 2006 ஆம் ஆண்டு சூர்யாவுடன் திருமணம் செய்த பின்னர் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
அதன் பின்னர் குழந்தைகள் நன்றாக வளர்ந்த பிறகு மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.அதைத் தொடர்ந்து நாச்சியார், உடன்பிறப்பே, காற்றின் மொழி, ராட்சசி என நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
டப்பா கார்ட்டெல்
பாலிவுட் பக்கம் சென்ற ஜோதிகா கடந்த ஆண்டு சைத்தான், ஸ்ரீகாந்த் ஆகிய ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். தற்போது டப்பா கார்டெல் என்ற வெப் சீரிஸ் மற்றும் லயன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
டப்பா கார்டெல் வெப் சீரிஸ் பிப்ரவரி 28 ஆம் தேதி அதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டு பேசினார். விழாவில் பேசிய அவர், ஹீரோக்களுடன் டூயட் பாடுவது, காதல் படங்களில் நடிப்பதையெல்லாம் 27 வயதிலேயே நிறுத்திவிட்டேன். எனக்கு அதில் நடித்து நடித்து போர் அடித்துவிட்டது. எனக்கு இப்போது 47 வயதாகிறது. பெண்களை மையப்படுத்திய படம், நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறேன்.
அப்படி நடித்ததுதான் டப்பா கார்ட்டெல். வீட்டிலேயே இருக்கும் பெண்கள் எப்படி வெளியுலகை எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த வெப் சீரிஸ் பேசும். பல பெண்களுக்கு அவர்களின் வாழ்க்கையில் நடந்தது போன்று ஒரு உணர்வு வரும்" என கூறியுள்ளார்.

நகரப்போகும் 2025 இல் ஏற்படபோகும் பேரழிவு : பீதியை கிளப்பும் பாபா வாங்காவின் திடுக்கிடும் கணிப்புக்கள் IBC Tamil
