''நீ தான் என் ஆசிர்வாதம் ஜோ. காதலுக்கும், மரியாதைக்கும் நன்றி'' - ஜோதிகா பகிர்ந்த புகைப்படத்துக்கு சூர்யா பதில்

suriya jyothika 15th wedding anniversary
By Irumporai Sep 11, 2021 08:25 AM GMT
Report

திருமண நாள் வாழ்த்து கூறிய ஜோதிகாவுக்கு சூர்யா அளித்த பதிலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்னர். நடிகர் சூர்யா - ஜோதிகாவும் காதலித்து கடந்த 2006 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்குப் பிறகு சூர்யா தயாரிக்கும் படங்களில் ஜோதிகா நடித்து வருகிறார். இருவரும் தங்களது திருமண தினத்தை இன்று சனிக்கிழமை கொண்டாடுகின்றனர். ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யாவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, 15 வருட மகிழ்ச்சி. காதலுக்கும் ஆசிர்வாதத்துக்கும் நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீ தான் என் ஆசிர்வாதம் ஜோ. காதலுக்கும், மரியாதைக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இணைந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.