கழுத்து மீது விழுந்த பார்..! பிரபல ஜிம் டிரெய்னர் ஜஸ்டின் விக்கி உயிரிழப்பு - ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல ஜிம் டிரெய்னர் ஜஸ்டின் விக்கி ஜிம்மில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது 210 கிலோ பார் கழுத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கழுத்தில் விழுந்த பார்
பிரபல பாடி பில்டரான ஜஸ்டின் விக்கி, இந்தோனேஷியாவிலுள்ள பாலி தீவில் உள்ள ஜிம்மில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது தனது தோள்பட்டையில் 210 கிலோ எடையை துாக்க முயற்சித்த போது முன்பக்கமாக விழுந்தார். அவரின் கழுத்து மற்றும் தோள்பட்டையில் 210 கிலோ எடை கொண்ட பார் விழுந்தது.
இதில் ஜஸ்டின் விக்கியின் கழுத்து உடைந்து கீழே விழுந்தார். பின்னர் உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சிசிச்சை பலனின்றி உயிரிழப்பு
மருத்துமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர், ஆனால் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் ஜஸ்டின் விக்கி உயிரிழந்தார்.
இவரின் உயிரிழப்பு குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில் முடிந்த வரை தாங்கள் போராடியதாகவும், ஆனால் அவரை தங்களால் காப்பாற்ற முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இவரின் உயிரிழப்பு அவரது ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.