குடும்பத்துடன் தலைமறைவான கனடா பிரதமர் - தடுப்பூசிக்கு எதிராக மக்கள் போராட்டம்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் அதிகரித்து வரும் கொரோன பரவல் காரணமாக அந்நாட்டு அரசு சமீபத்தில் சில கட்டுப்பாடுகளை வெளியிட்டது. அதன்படி மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்றும், லாரி ஓட்டுநர்கள் ஒரு மாகாணத்திலிருந்து மற்றொரு மாகாணத்திற்குச் செல்லவும், அமெரிக்க எல்லையைக் கடக்கவும் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அரசின் இந்த கட்டுப்பாடுகள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நாடு முழுவதும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
குறிப்பாக லாரி ஓட்டுநர்கள் கனடா தலைநகரில் ஒட்டாவாவில் நுழைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிரதமரின் பாதுகாப்பில் சிக்கல் ஏற்படலாம் என அந்நாட்டு பாதுகாப்பு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.