இளம் காவல்துறை பெண் அதிகாரி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் - காதலன் சரண்

Police Women Justice For Sabiya Justice For Sabiya Saifi Justice For Rabiya
By Thahir Sep 06, 2021 02:30 AM GMT
Report

டெல்லியில்இளம்காவல்துறைபெண்அதிகாரி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக பெண்ணின் காதலன் சரணடைந்துள்ளார்.

டெல்லி சங்கம் விகார் பகுதியை சேர்ந்த ரபியா ஷைஃபி (21) சிவில் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 26ஆம் தேதி பணிக்கு சென்ற ஷைஃபி, வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், பல இடங்களில் தேடினர். அவர் கிடைக்கவில்லை என்பதால் போலீஸில் புகார் அளித்தனர்.

இளம் காவல்துறை பெண் அதிகாரி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் -  காதலன் சரண் | Justiceforrabiya Rabiya Sabiyasaifi Murder

இந்நிலையில் காணாமல் போன ஷைஃபி, சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. உடலின் பல இடங்களில் கத்தியால் சரமாரியாகக் குத்தி, கொடூரமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்துக்கு நீதி கேட்டு, டெல்லி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சமூக வலை தளங்களில் #JusticeForRabiya என ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

இந்நிலையில் கொலை தொடர்பாக நிஜாமுதீன் என்பவர் போலீசில் சரணடைந்துள்ளார். ரபியாவும் தானும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாகவும் அவர் நடத்தையில் சந்தேகமடைந்து கொன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த மாதம் 26ஆம் தேதி ரபியாவை, சுராஜ்குந்த் பகுதிக்கு அழைத்துச் சென்ற நிஜாமுதீன், அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பின்னர் ஆத்திரத்தில் அவரைக் குத்திக் கொன்றதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், ரபியாவின் பெற்றோர் இதை மறுத்துள்ளனர். நிஜாமுதீன், ரபியாவின் நண்பர் என்றும் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

காதலன் கடத்திச் சென்று கொலை செய்ததாக சரணடைந்துள்ள நிலையில் ரபியாவின் பிரேத பரிசோதனையில் அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் காதலன் என்று கூறி சரணடைந்த நிஜாமுதீன் கொலை செய்ததாக கூறியுள்ளார்.

இவரின் வாக்குமூலம் பலரையும் சந்தேகமடைய செய்துள்ளது.இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.