விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி!

Tamil nadu Vinayagar Chaturthi Madras High Court
By Jiyath Sep 13, 2023 11:14 AM GMT
Report

விநாயகர் சதுர்த்தி சிலை ஊரவலங்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் மனு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் 22 இடங்களிலும், திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் காவல் நிலையத்துக்குட்பட்ட 13 இடங்களிலும், கோவை மாவட்டம் சிறுமுகையில் 16 இடங்களிலும் சிலை வைத்து வழிபடுவதற்கும்,

விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி! | Justice Question Vinayagar Idol Processions

ஊர்வலங்களுக்கும் அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் உள்ளூர் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராகவும், விநாயகர் சிலை வைப்பதற்கும், ஊர்வலத்துக்கும் அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செயப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

நீதிபதி கருத்து

அப்போது காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அனைத்து அமைப்புகளும் சிலை வைக்க அனுமதிக்கப்படுவதாக கூறினார். மேலும், அந்தந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு சிலை வைப்பதற்கு அனுமதி கோரிய மனுக்கள் மீது உள்ளூர் போலீசார் அனுமதியளிப்பதாக தெரிவித்தார்.

விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி! | Justice Question Vinayagar Idol Processions

இந்த வழக்கைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்ட இடங்களில் இந்த ஆண்டும் சிலை வைக்க அனுமதி அளிக்கப்படும் எனவும், ஈரோடு மாவட்டம் அன்னூரில் இருக்கும் நபர் கோவை மாவட்டம் சிறுமுகையில் சிலை வைக்க அனுமதி கோருவதாகவும் குறிப்பிட்டார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், `தமிழக அரசின் அரசாணைக்கு மாறாக விநாயகர் சிலை வைப்பதற்கு அனுமதி கோரி மனு தாக்கல் செய்தால் அந்த மனு ஏற்கப்படாது' எனக் கூறி மனுக்களை முடித்துவைத்தார்.

விநாயகர் சிலை ஊர்வல கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்? நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேள்வி! | Justice Question Vinayagar Idol Processions

மேலும், "சிலை வைத்து அதை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்படி விநாயகர் கூறவில்லை" என தெரிவித்த நீதிபதி, "இந்தக் கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன்" எனவும் காட்டமாக கேள்வி எழுப்பினார். மேலும், விநாயகரை வைத்து அரசியல் செய்யப்படுவதாகக் கூறிய நீதிபதி, இவை அனைத்தும் தனது சொந்தக் கருத்து மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.