உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்று ஓய்வு
உச்சநீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக பதவி வகித்த என்.வி.ரமணா இன்றுடன் பணியி ஓய்வு பெறுகிறார்.
என்.வி.ரமணா
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பொன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் என்.வி. ரமணா. 1983 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியை தொடங்கிய இவர் இ 2000வது ஆண்டு உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து 2013ல் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார், 2014ல் உச்சநீதிமன்ற நீதிபதியானார்.
இன்றுடன் பணிஓய்வு
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதி என்.வி.ரமணா இன்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில் புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித் நாளை பதவி ஏற்க உள்ளார்.