காவலர் சபியா சைஃபி படுகொலை - தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்
டெல்லியில் காவலர் சபியா சைஃபி படுகொலை செய்யப்பட்ட சம்பம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சங்க விஹார் பகுதியை சேர்ந்தவர் சபியா சைஃபி இவர் கடந்த மாதம் 26-ஆம் தேதி பணிக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை தேடி அலைந்துள்ளனர்.இந்நிலையில் அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 50க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்துவுடன் படுகொலை செய்யப்பட்டு காட்டு பகுதியில் அவரது உடல் வீசப்பட்டிருந்தது.
இதையடுத்து இச்சம்வம் தற்போது பூகம்பம் போல் உருவெடுத்துள்ளது.தற்போது இச்சம்பவம் தமிழகம் முழுவதும் போராட்டமாக மாறியுள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் எஸ்டிபிஐ,தமுமுக உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
குறிப்பாக இந்த அமைப்பில் இருக்க கூடிய பெண்கள் இந்த போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.போராட்ட களங்களில் ஈடுபடும் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சபியா சைஃபியின் குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும்.
அவரை பாலியல் பலாத்காரம் செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.