நாங்குநேரி வெறிச்செயல்...களமிறங்கும் நீதிபதி ஜஸ்டிஸ் சந்துரு
நாங்குநேரி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அந்த விவகாரத்தில் விசாரணையை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தனிநபர் சிறப்பு குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
நாங்குநேரி சம்பவம்
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில், சாதிய காழ்புணர்ச்சியால் சக மாணவனை பள்ளி மாணவர்கள் அரிவாளால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதலில் படுகாயமுற்ற மாணவன் மற்றும் அவனது சகோதரி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனிநபர் குழு அமைப்பு
இந்நிலையில், தற்போது தமிழக அரசு பட்டியலின மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்பு குழுவை நியமித்துள்ளது.
இந்த குழுவானது தமிழக பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகள் தவிர்த்து, அவர்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட வழிமுறைகளை வகுக்கும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.