ஜூனியர் உலக கோப்பை: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் திரில் வெற்றி

Cricket 2022 Junior World Cup AFG Vs SL
By Thahir Jan 28, 2022 01:16 AM GMT
Report

ஜூனியர் உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், குரூப் சி பிரிவில் 2ம் இடம் பிடித்த ஆப்கானிஸ்தான் அணியும், குரூப் டி பிரிவில் முதல் இடம் பிடித்த இலங்கை அணியும் மோதின.

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அப்துல் ஹாதி 37 ரன்னும், நூர் அகமது 30 ரன்னும் எடுத்தனர். இலங்கை அணி சார்பில் வினுஜா ரான்பால் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியினரின் அசத்தலான பீல்டிங்கில் இலங்கை அணி சிக்கியது.

இலங்கை அணியில் துனித் வெல்லலகே அதிகபட்சமாக 31 ரன் எடுத்தார். 45வது ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இலங்கை அணி 6 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.

இந்த ஆட்டத்தில் 4 பேர் ரன் அவுட்டாகினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் 4 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் பிலால் சமி 2 விக்கெட், நூர் அகமது, நவீத் சட்ரான், இஜாருல்லா நவீத் மற்றும் கரோடே ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இலங்கை அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினர் எக்ஸ்ட்ராசாக 34 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.